தங்கள் பள்ளியின் செய்திகள்/நிகழ்வுகள் இந்த தளத்தில் இடம்பெற செய்தி மற்றும் புகைப்படங்களை krishnan.pmv@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.பிற மாவட்ட பள்ளிகளும் அனுப்பலாம்.

01-01-2016 :நாளிதழ் பதிவுகள் : மீத்திறன் மாணவா்களுக்கு உயா்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி.

நன்றி: தினத்தந்தி நாள்: 01-01-2016
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

-------------------

நன்றி: தினமணி  நாள்:01-01-2016

வேலைவாய்ப்புக்குத் தேவையான கல்வியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் 


By புதுக்கோட்டை,
First Published : 01 January 2016 04:18 AM IST
வேலைவாய்ப்புக்குத் தேவையான படிப்பை முடித்திருக்கிறேன் என்று கூறும் வகையில் படிப்பு அமைய வேண்டும் என்றார் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் ஏ. காந்தி.
புதுக்கோட்டையில் அரசுப் பள்ளிகளில் 10, 12 ஆம் வகுப்பு பயிலும் திறன்மிகு மாணவர்களுக்காக வியாழக்கிழமை நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டி முகாமில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மேலும் அவர் பேசியது:
போட்டிகள் நிறைந்த இன்றைய காலக்கட்டத்தில் பயிலும் மாணவர்கள் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால வேலைவாய்ப்புகளை கருத்தில் கொண்டு படிப்புகளைத் தோóந்தெடுக்க வேண்டும். அப்படித் தேர்வுசெய்த பாடத்தையும் தாண்டி புதிய தொழில்நுட்ப அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இதேபோல, கல்வி நிறுவனங்களும் பாடத்திட்டத்தைத் தாண்டி அண்மைக்கால தொழில்நுட்பத்தை கற்பிக்க முன்வந்தால் மட்டுமே வேலைவாய்ப்பு முகாம்களில் மாணவர்களை வெற்றிபெற வைக்க முடியும். மாணவர்கள் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மதிப்பளித்து படித்தால்தான் உயர்ந்த இலக்கை அடைய முடியும். பட்டப் படிப்பை முடித்தாலும், முதுநிலை படிப்புத் தகுதியையும் முடித்தால் வேலைவாய்ப்பை எளிதில் பெறலாம். இந்தப் படிப்பை முடித்திருக்கிறேன் என்பதைவிட வேலைவாய்ப்புக்குத் தேவையான படிப்பை முடித்திருக்கிறேன் என்று கூறும் வகையில் படிப்பு அமைய வேண்டும்.
இருந்த இடத்தில் இருந்துகொண்டிருந்தால் எதுவும் கிடைப்பதில்லை. விடாமுயற்சி செய்தால் மட்டுமே வெற்றி சாத்தியமாகும். இப்பயிற்சி முகாமில் படிக்கும் மாணவர்களில் மாவட்டத்தில் முதலிடம் பெறுபவரின் உயர்கல்விக்கான முதல் ஆண்டுக் கல்விக் கட்டணத்தை ஏற்றுக்கொள்கிறேன் என்றார் அவர்.
பள்ளிக் கல்வித் துறை மூலம் நடைபெற்ற உண்டு, உறைவிட சிறப்புப் பயிற்சி முகாமில், மாவட்டத்தில் உள்ள 125 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர், பத்தாம் வகுப்பு மீத்திறன் மாணவர்கள், அரசு பிளஸ் 2 மீத்திறன் மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் அதிகமானோர் முகாமில் பங்கேற்றனர். முதன்மைக் கல்வி அலுவலர் செ. சாந்தி தலைமை வகித்தார். புதுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் (பொ) ப. மாணிக்கம் வரவேற்றார்.
01-01-2016 :நாளிதழ் பதிவுகள் : மீத்திறன் மாணவா்களுக்கு உயா்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி. 01-01-2016 :நாளிதழ் பதிவுகள் : மீத்திறன் மாணவா்களுக்கு உயா்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி. Reviewed by Unknown on 7:00:00 PM Rating: 5
Powered by Blogger.