தங்கள் பள்ளியின் செய்திகள்/நிகழ்வுகள் இந்த தளத்தில் இடம்பெற செய்தி மற்றும் புகைப்படங்களை krishnan.pmv@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.பிற மாவட்ட பள்ளிகளும் அனுப்பலாம்.

புதுக்கோட்டை மாவட்ட அரசுப்பள்ளிகளில் பிளஸ்டூ பயிலும் மீத்திறன் மாணவா்களுக்கான உண்டு, உறைவிட சிறப்புப்பயிற்சி முகாம்


புதுக்கோட்டை,டிச,19-

புதுக்கோட்டை மாவட்ட அரசுப்பள்ளிகளில் பிளஸ்டூ பயிலும் மீத்திறன் மாணவா்களுக்கான உண்டு, உறைவிட சிறப்புப்பயிற்சி முகாம். மாண்புமிகு  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு.ந.சுப்பிரமணியன், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் டாக்டா் சி.விஜயபாஸ்கா் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 2015-2015 கல்வியாண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்று வரும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவா்களுக்கான உண்டு, உறைவிட சிறப்புப்பயிற்சி முகாம் தொடக்கவிழா புதுக்கோட்டை ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில் இன்று 19-12-2015(சனிக்கிழமை) நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவா் திரு சு.கணேஷ் இ.ஆ.ப அவா்கள் தலைமையில் நடைபெற்றது.


இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக
மாண்புமிகு  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு.ந.சுப்பிரமணியன்,


மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் டாக்டா் சி. விஜயபாஸ்கா்

ஆகியோர்கள் கலந்துகொண்டு உண்டு, உறைவிட சிறப்புப்பயிற்சி முகாமினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து மாணவா்களின் நலன் கருதி தமிழக முதல்அமைச்சா் செயல்படுத்திவரும் பல்வேறு வகையான நலத்திட்டங்கள் குறித்து விழாப்பேரூரை ஆற்றினார்கள்.



  இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் திருமதி செ. சாந்தி வரவேற்று பேசினார்.



இவ்விழாவில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினா் திரு வி.ஆா்.கார்த்திக்தொண்டைமான்,

அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினா் திரு மு.ராஜநாயகம்,

மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவா் திரு வி.சி. இராமையா,

புதுக்கோட்டை நகராட்சித்தலைவா் திரு இரா. இராஜசேகரன்,

மாவட்ட ஊராட்சிக்குழுத்துணைத்தலைவா் திரு ஆா்.சந்திரன், 

அறந்தாங்கி கல்வி மாவட்ட மாவட்டக்கல்வி அலுவலா் (பொ) திரு ஆா். சண்முகம்,

புதுக்கோட்டை 34-வது வார்டு நகா்மன்ற உறுப்பினா் திருமதி ஏ.கிரேஸி

ஆகியோர் கலந்துகொண்டு உண்டு, உறைவிட சிறப்புப்பயிற்சி முகாமினை வாழ்த்தி பேசினார்கள்.

நிறைவாக புதுக்கோட்டை கல்வி மாவட்ட மாவட்டக்கல்வி அலுவலா்(பொ) திரு ப.மாணிக்கம் நன்றி கூறினார்.

32 நாட்கள் நடைபெறும் இந்த சிறப்புப்பயிற்சி முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 99 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து பள்ளிக்கு ஒரு மீத்திறன் மாணவா் வீதம் 99 மாணவா்கள் பங்கேற்கிறார்கள்.
இப்பயிற்சியில் பங்கேற்கும்  மாணவா்களுக்கு தங்குமிடம், உணவு, சிற்றுண்டி,தேநீா் ஆகியவை வழங்கப்பட உள்ளது.


இப்பயிற்சி வகுப்பானது 19-12-2015(சனிக்கிழமை)  தொடங்கி 03-01-2016(ஞாயிற்றுக்கிழமை) வரை 16 நாட்களும், 10-01-2016(சனிக்கிழமை) முதல் 29-02-2016(திங்கட்கிழமை) வரை உள்ள சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 16 நாட்களும் ஆக மொத்தம் 32 நாட்கள் நடைபெற உள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ் வழியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மீத்திறன் மாணவா்கள் தமிழக அளவில் மார்ச்2016 அரசுப்பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதன்மையான இடங்களை பிடித்து தலைசிறந்த மருத்துவக்கல்லூரிகளிலும்( புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி உள்பட) அண்ணாப்பல்கலைக்கழகம் உள்ளிட்ட சிறந்த பொறியியல் கல்லூரிகளிலும் மேற்படிப்பு பயில்வதற்கான வாய்ப்பை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு இந்த உண்டு, உறைவிடசிறப்புப்பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.



இப்பயிற்சி வகுப்பானது புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.
மாணவா்கள் தங்குவதற்கு புதுக்கோட்டை தூய மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், மாணவிகள் தங்குவதற்கு புதுக்கோட்டை திருஇருதய மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இப்பயிற்சியில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், ஆகிய பாடங்களுக்கு பாடத்திற்கு தலா 4 கருத்தாளா்கள் வீதம் 16 கருத்தாளா்களும்,தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு தலா 1 கருத்தாளா் வீதம் 2 கருத்தாளா்களும் ஆக மொத்தம் 18 சிறந்த முதுகலை ஆசிரியா்கள் கருத்தாளா்களாக பயிற்சி அளிக்க உள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்ட அரசுப்பள்ளிகளில் பிளஸ்டூ பயிலும் மீத்திறன் மாணவா்களுக்கான உண்டு, உறைவிட சிறப்புப்பயிற்சி முகாம் புதுக்கோட்டை மாவட்ட அரசுப்பள்ளிகளில் பிளஸ்டூ பயிலும் மீத்திறன் மாணவா்களுக்கான உண்டு, உறைவிட சிறப்புப்பயிற்சி முகாம் Reviewed by Unknown on 9:56:00 PM Rating: 5
Powered by Blogger.